சென்னை: 2024 -25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அறிவித்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார் மேயர் பிரியா.
நடபாண்டில் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (19.2.24)சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா ராஜன். இவர் மேயராகப் பதவியேற்ற குறுகிய காலகட்டத்தில் 2022 -2023ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகை கூடரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்தார். இதில் பள்ளி கல்வித்துறை, விளையாட்டுத்துறை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.பிப்ரவரி 22ஆம் தேதி இந்த பட்ஜெட்டுக்கான விவாதம் நடைபெற உள்ளது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}