மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. இதையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மதுரையில் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து லட்சம் பேருக்கு கல்யாண விருந்துக்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அங்கயற்கண்ண, ஆலவாய் அம்மன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மீனாட்சியின் ஆட்சியில் மதுரை மாநகரம் காலாகாலமாக செழித்தோங்கி வருகிறது. அந்த அம்மனுக்கு இன்று திருக்கல்யாணம். அருள்மிகு சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் இந்தத் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடந்தேறியது.

தமிழ்நாட்டுத் திருவிழாக்களில் மிகுந்த பிரசித்தி பெற்ற விழாவாக மதுரை சித்திரை திருவிழா கருதப்படுகிறது. 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தான். லட்சோபம் லட்சம் மக்கள் திரண்டு வந்து அம்மனைத் திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்து அவளது அருள் பெற்று மகிழ்வார்கள்.
பட்டாபிஷேகம் முடிந்ததும் மீனாட்சியின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கோவிலின் வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அம்மனுக்கு திருமணம் நடந்த அதே தருணத்தில் மண்டபத்தில் கூடியிருந்த பெண்களும் தங்களது தாலிச் சரடுகளை மாற்றிக் கொண்டனர். அதேபோல வீடுகளிலும் பெண்கள் தாலிச் சரடு மாட்டிக் கொண்டனர்.
அறுசுவை விருந்து
அம்மனுக்கு திருக்கல்யாணம் நடப்பதையொட்டி இன்று மதுரையில் மாபெரும் அறுசுவை திருமண விருந்துக்கும் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் கூடிய விருந்து லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திருக்கல்யாண வைபவத்தையொட்டி மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மதுரையில் உள்ள அத்தனை பேர் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அத்தனை பெண்களின் கண்களும் இன்று மீனாட்சி அம்மன் கோவில் பக்கமே திரும்பியிருந்தது. திருக்கல்யாண வைபத்தையொட்டி கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவலுக்கு வந்திருந்த பல பெண் காவலர்களும் கூட இன்று தாலிச் சரடுகளை மாற்றிக் கொண்டைக் காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}