ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை... முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

Aug 02, 2023,01:53 PM IST
சென்னை : ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்கான கோப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. 

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை போட்டி தொடர் ஆகஸ்ட் 3 ம் தேதியான நாளை துவங்க உள்ளது. நாளை துவங்கி, ஆகஸ்ட் 12 ம் தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. 
ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஹாக்கி அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த போட்டி தொடரின் முதல் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.



ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி தொடருக்கான கோப்பை தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் துவங்கி, பல மாவட்டங்களை சுற்றி சென்னை வந்துள்ளது . ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சுமா���் 15 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. கடைசியாக 2005 ம் ஆண்டு சென்னையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 7வது ஆசிய சாம்பியஸ் டிராபி போட்டி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 9 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்