மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

Dec 13, 2025,04:57 PM IST

கொல்கத்தா: கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்சசியில் நடந்த குளறுபடிக்கு மேற்கு டங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார்.


அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி. இவர் 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று நள்ளிரவில் இந்தியா வந்தார். கொல்கத்தாவில் வந்திறங்கிய மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் உள்ள அவரது உருவ சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார். அதன்பின்னர் கொல்கத்தாவின் சால்க் லேக் மைதானத்திற்கு மெஸ்ஸி  சென்றார். சிறிது நேரத்திலேயே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.


இந்த நேரத்தில் மெஸ்ஸியை சுற்றி முக்கிய பிரபலங்கள் மற்றும் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டதால், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அங்கு கலவரத்தை ஏற்படுத்தினர். தண்ணீர் பாட்டில்கள் தூக்கி வீசப்பட்டன. அங்கிருந்த பொருட்களையும் ரசிகர்கள் உடைக்கத்து நொருக்கினர். மேலும் பிரபலங்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தையும் தீவைத்து எரித்தனர்.நிலைமை மோசமானதால் போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர்.




இந்த சம்பவம் அறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக மெஸ்ஸி மற்றும் அரவது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.  இதுபற்றி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இன்று சால்ட் லேக் மைதானத்தில் காணப்பட்ட நிர்வாகக் கோளாறு குறித்து நான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லயோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரை உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளேன். விரிவான விசாரணை நடத்துவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சரியான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் போன்ற பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.


ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

வெள்ளை யானை வழிபட்ட திருத்தலம்.. திருவானைக்கா.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

அதிகம் பார்க்கும் செய்திகள்