சான்பிரான்சிஸ்கோ: வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட சாட்களிலும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக CREATE EVENT என்ற சிறப்பம்சத்தை கொண்டு வந்துள்ளது மெட்டா நிறுவனம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள மெட்டா நிறுவனம் ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், த்ரெட்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளத்தை உலக அளவில் 35 கோடி பேர் உபயோகிக்கின்றனர். அதேபோல் வாட்ஸ் அப் செயலியை 50 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்.
போட்டிகள் கடுமையாகி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, மெட்டா நிறுவனம் அவ்வப்போது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் whatsapp ஆப்களில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. அதாவது whatsapp ஆப்பில் தனிப்பட்ட சாட்டுகளிலும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக CREATE EVENT என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது மெட்டா நிறுவனம்.
ஏற்கனவே குரூப்- சாட்டுகளில் மட்டுமே இருந்த create event, தற்போது private chat-களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு ஐபோன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}