டெல்லி: சமூக ஊடக நிறுவனமான மெட்டா, கன்னட மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக மொழிபெயர்த்திருந்தது மெட்டா. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிபெயர்ப்பை நிறுத்தும்படி மெட்டாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களில் கன்னட மொழிபெயர்ப்பு தவறாக இருப்பதால், உண்மை தகவல்கள் திரிக்கப்பட்டு, பயனர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் மெட்டா செய்தி தொடர்பாளர் விளக்கியுள்ளார். சமீபத்தில் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி காலமானார். அவரது மறைவுக்கு சித்தராமையா இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அந்த பதிவின் மொழிபெயர்ப்பில்தான், முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக இடம் பெற்றிருந்தது.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெட்டாவின் இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் சித்தராமையாவும் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்துக் குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பாக அதிகாரப்பூர்வ தகவல்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த தளங்களில் காட்டப்படும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மொழிபெயர்ப்பு வசதியெல்லாம் ஏஐ வந்த பிறகுதான் அதிகரித்துள்ளது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்ப முடியாது என்பதை சமீப காலமாக உறுதியாகி வருகிறது. பல தவறுகள் அதில் இடம் பெறுகின்றன. ஏஐ தரும் தகவல்கள் அனைத்தும் சரி என்று யாரும் நம்பி விடக் கூடாது என்று அதை உருவாக்கியவர்களே கூறுகிறார்கள். குறிப்பாக சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ தளங்களில், எங்களது ஏஐ தவறு செய்யக் கூடும், மீண்டும் ஒரு முறை தகவல்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்ற வாசகமும் கூடவே இடம் பெறுகிறது. அந்த அளவுக்கு ஏஐயில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குழப்பம்தான் இந்த மெட்டா குழப்பமும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பயோகிராபி மற்றும் குறிப்பிட்ட தகவல்களை மொழிபெயர்க்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}