வாஷிங்டன், சியாட்டில் அலுவலகங்களை காலி செய்த மெட்டா, பேஸ்புக்.. ஒர்க் ஃபிரம் ஹோம் அமல்!

Jan 16, 2023,01:06 PM IST
கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும், அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகர்களில் உள்ள தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு இந்த நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர். பலர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.



பேஸ்புக் நிறுவனம், சியாட்டில் நகரில் உள்ள 6 மாடிக் கட்டடத்தையும், வாஷிங்டனின் பெல்லுவியில் உள்ள 11 மாடிக் கட்டடத்தையும் காலி செய்து விட்டு அதை சப் லீசுக்கு விட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியாட்டிலில் உள்ள மேலும் சில அலுவலகங்களையும் காலிசெய்து விட்டு அவற்றை சப் லீசுக்கு விட அது தீர்மானித்துள்ளதாம். பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் பெல்லுவியில் உள்ள 26 மாடிக் கட்டட அலுவலகத்தின் வாடகை ஒப்பந்தத்தை நீட்டிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அலுவலகத்தை காலி செய்ய அது தீர்மானித்துள்ளது.

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப் நிறுவனங்கள் பொருளாதார சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பலர் வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் செலவுகள் குறைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கலாச்சாரம் தொடர்கிறது அல்லது அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மெட்டா நிறுவனம் சியாட்டிலில் வேலை பார்த்து வந்த 726 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாவதாக மெட்டா விளக்கம் கொடுத்துள்ளது.

சியாட்டிலில் மட்டும் 29 கட்டடங்களில் மெட்டா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மொத்தமாக 8000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை அலுவலகமான மென்லோ பார்க் வளாகத்தை விட்டு அதிக அளவில் பணியாளர்கள் வேலை பார்க்கும் நகரம் சியாட்டில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சியாட்டில் நகரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பாதி தற்போது காலியாகத்தான் இருக்கிறதாம்.

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்