சேலம்: 99 வயதாகும் மேட்டூர் அணையானது, 43வது முறையாக தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு காதில் தேன் பாய்ந்தது போல வந்து சேர்ந்துள்ளது இந்த செய்தி. நேற்றே 120 அடியை எட்டியிருக்க வேண்டிய நிலையில் நீர் வரத்து குறைந்ததால் சற்று தாமதமாகி இன்று மாலை காவிரி அன்னை, மேட்டூர் அணையை நிரப்பி அனைவரது வயிற்றிலும் பால் வார்த்துள்ளாள்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவை எட்டும் என்ற நிலை இருந்தது. தற்போது மாலை 6 மணி அளவில் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது.

தற்போது அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விநாடிக்கு 46,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக 80,000 கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. நீர் வரத்தைப் பொறுத்து இது மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிகப்படியான உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், 1.25 லட்சம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வள துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (30.7.2024) காலை 8 மணி அளவில் 118.840 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடலாம் என்றும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}