சென்னை: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது விநாடிக்கு 53,098 கன அடி என்ற அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடக மாவட்டம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி அணைக்கு நீரின் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக தல காவிரியில் கடந்த 12 மணி நேரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கே ஆர் எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணை பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், கபினி அணை பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும், பெய்துள்ளது.
கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ண சாகர் அணையின் நீர்மட்டம் 114 அடி ஆகும். தற்போது இந்த அணையில் விநாடிக்கு 40000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 63 அடி ஆகும். தற்போது அணைக்கு விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 47 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது அதேபோல் ஹாரங்கி அணையிலிருந்து விநாடிக்கு 20000 கன அடி நீரும், ஹேமாவதி அணையிலிருந்து 26,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது

கன மழை தொடரும்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன்படி கிருஷ்ணர் சாகர் அணையின் நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், இந்த அணையிலிருந்து அதிகபட்சம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு மிக விரைவிலேயே விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக காவிரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 61.81 அடியாக இருந்த நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 53,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 62 அடியை நெருங்கி வருகிறது.
காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அபரிமிதமாக இருக்கும் பட்சத்தில் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை ரத்து.. இன்றே தீபம் ஏற்ற வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}