மெக்சிகோ சிட்டி: மெர்சிகோவில் ஒரு காமெடியான சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்களை மிரட்டியதாக கூறி ஒரு பொம்மையைக் கைது செய்துள்ளது அந்த நாட்டு போலீஸ்.
சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த குட்டி பாப்பா பொம்மைக்கு கை விலங்கு மாட்டியதோடு, வழக்கமாக கைது செய்யப்பட்டவர்களை போட்டோ எடுப்பது போல இதையும் போட்டோ எடுத்து பலரின் கேலிக்குள்ளாகியுள்ளது மெக்சிகோ போலீஸ்.
இந்தக் கைதுக்கான பின்னணி சுவாரஸ்யமானது...!
செப்டம்பர் 11ம் தேதி வடக்கு மெக்சிகோவின் மான்க்ளோவா நகரில் ஒரு நபர் மீது போலீஸுக்குப் புகார் வந்தது. அவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், இடையூறு செய்யும் வகையிலும் நடந்து கொள்வதாக புகார் வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரது பெயர் கார்லோஸ். இவர் தனது கையில் வைத்திருந்த பெரிய சைஸ் பொம்மையைக் காட்டி மக்களை மிரட்டியதாக போலீஸார் கூறுகின்றனர். எனவே கார்லோஸைக் கைது செய்தபோது இந்த பொம்மையையும் சேர்த்துக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த பொம்மையின் கையில் கத்தி இருந்தது. அதை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். மக்களின் முகத்தில் அடித்துள்ளனர். இது குற்றச் செயலாகும். எனவேதான் பொம்மையும் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறியுள்ளது போலீஸ்.
காவல் நிலையத்தில் அந்த பொம்மையின் தலையைத் தூக்கிப் பிடித்து போட்டோ எடுத்தபோது அங்கிருந்த போலீஸார் சிரித்து ரசித்துள்ளனர். இந்த சம்பவம் மெக்சிகோவில் கேலிக்கூத்தான நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸாரைக் கண்டித்துள்ளனர். அந்த பொம்மையையும் விட்டு விடுமாறு உத்தரவிட்டனர். கைது செய்யப்பட்ட நபரும் விடுவிக்கப்பட்டார்.
இந்த பொம்மைக்கு மெக்சிகோவில் சக்கி பொம்மை என்று பெயர். இது 1988ம் ஆண்டு வெளியான சைல்ட்ஸ் பிளே என்ற படத்தில் இடம் பெற்று பிரபலமான பொம்மையாகும். அது ஒரு ஹாரர் படம். ஒரு பையனின் ஆத்மா இந்த பொம்மைக்குள் வருவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். அன்று முதல் மெக்சிகோவில் இந்த சக்கி பொம்மை பிரபலமாகி விட்டது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}