புதுடில்லி: Crowd strike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் 'Blue Screen of Death' Error ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு:

இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் சாப்வேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கையால் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது. விரைவில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் எனவும், வியாழன் மாலை கிளவுட் சேவைகளில் பாதிப்பு உருவானது என்றும், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ராசாஃப்ட் வின்டோஸ் பயன்படுத்தும் பல ஆயிரம் கம்யூட்டர்கள் மற்றும் பேப்டாப்கள் செயல் இழப்பால் உலகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கியுள்ளன. லண்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனை ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் தனது இணையதள பதிவில், "ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதம் தோறும் சாப்வேர் அப்டேட் செய்து வருவதாகவும், இந்த முறை தான் இது போன்ற தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}