நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

Sep 10, 2025,12:43 PM IST

காத்மாண்டு: நேபாள நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை வித்தது. இதனையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டதால் நேபாள பிரதமர் ராஜினாமா செய்த நிலையில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.


நேபாள நாட்டில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து  Gen Z தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சமூக வலைதளங்கள் இயக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்களை தடை செய்தது.




சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளம் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி சென்றனர். பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் உயிரிழந்தார். சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காத்மாண்டுவில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.  நேபாளத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கைது செய்யப்பட்டனர்.


நாட்டின் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகள் என அனைத்து தீக்கரையாகின. முன்னாள் பிரதமர் வீட்டிற்கு தி வைக்கப்பட்டதில், அவரது மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்கள் என அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த நேபாள ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. புதிய ஆட்சி அல்லது இடைக்கால அரசாங்கம் அமையும் வரை நேபாளத்தில் ராணுவ ஆட்சி தொடரும் என தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

news

யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

news

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை

news

கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

news

வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?

news

தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி

news

கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!

news

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்