சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் மிகவும் முக்கியமானதாக இருப்பது பால். இந்த பால் அரசு தயாரிக்கும் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆவின்பால் தினமும் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும், ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை அதிமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் ஆரோக்கியா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. ஆவின் பாலை அடுத்து மக்கள் அதிகமாக வாங்கும் பால் என்றால் அது ஆரோக்கியா தான். ஏற்கனவே ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் இன்று முதல் 67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் மட்டும் இன்றி தயிர் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}