சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது ஏன நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி எல்லா மாநிலங்களுக்குமான உரிமையை நிலைநாட்டியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதை முதலமைச்சர் இடம் தெரிவித்த போது, கலந்து கொள்ள இசைவு தெரிவித்ததை அடுத்து, மாநில சுயாட்சியை சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற முதலமைச்சருக்கு உயர்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெரும் என பேரவையில், அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}