நமச்சிவாயத்துக்கு நடுக் கடலில் மூழ்கி வாழ்த்து.. ஆஹா.. வேற லெவல்ல இருக்கே!

Aug 23, 2023,01:22 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்காரர்கள் எப்பவுமே பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதில் தனி பாணியைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதை மீண்டும் அசத்தலாக நிரூபித்துள்ளனர்.

புதுச்சேரியில் அரசியல் தொண்டர்கள்,  நடிகர்களின் ரசிகர்கள் ஆகியோரிடம் ஒரு வித்தியாசமான வழக்கம் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தங்களது அபிமானத் தலைவர்கள், நடிகர்களுக்குப் பிறந்த நாள் உள்ளிட்ட ஏதாவது நிகழ்வு வரும்போது நடுக் கடலில் போய் பேனர் கட்டி வாழ்த்து தெரிவிப்பது புது ஸ்டைலாக மாறியுள்ளது. அதேபோல தேர்தலில் வெற்றி பெற்றால், புதுப் படம் ரிலீஸானால் இதெல்லாம் நடக்கும். பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.



இந்த நிலையில் புதுச்சேரியின் ஸ்டிராங்மேன், யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்த நாள் செப்டம்பர் 8ம் தேதி வருகிறது.  இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் இப்பவே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.  பல்வேறு நலத்திட்ட உதவிகளோடு தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் எல்லாக் கொண்டாட்டங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் அவரது ஆதரவாளரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் செய்துள்ள செயல் அமைந்து விட்டது. ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஆழ்கடலில் போய் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

அந்த பேனரில், புதுவையை ஆளப் பிறந்தவரே, வாழ்க பல்லாண்டு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வித்தியாசமான வாழ்த்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்