சென்னை: தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. 200 தொகுதிகளில் திமுக வெல்ல முடியாது என தற்குறிகளாக சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போது சொல்கிறேன், எங்களது இலக்கு 200 அல்ல, 234 தொகுதிகளும்தான் என்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவேசமாக பதில் தெரிவித்துள்ளார்.
விகடன் பிரசுரம் சார்பில் எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜூனாவால் தொகுக்கப்பட்ட இந்த நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் விஜய் பேசுகையில், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.. நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலளித்தார். அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்கிற திமுகவின் நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராமல் பேசிக்கொண்டு உள்ளனர். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும்,கைப்பற்றும், கைப்பற்றும்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக திமுக மீது எப்படி எல்லாம் அவதூறுகள் பரப்பப்படுகிறேதா, அப்போதெல்லாம் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கிமீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது என்று கூறினார்.
விக்கிரவாண்டியில் விஜய் பேசிய பேச்சு ஒரு மாதத்தையும் தாண்டி அனல் பரப்பியது. நேற்று விஜய் பேசியதை வைத்து இது எத்தனை நாட்கள் சூடாக ஓடும் என்பது தெரியவில்லை. ஆனால் படு சூடாக கிளம்பி விட்டதாகவே தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}