சென்னை: தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை திமுக கொரட்டூரில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உத்திரபிரதேசத்திலும் இன்னும் இயல்புநிலைக்கு அந்த மாநிலம் திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்தை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எந்தவித குற்றச்சாட்டுகள் புகார்கள் என்றாலும் அவர் நேரடியாக முன் நின்று தீர்த்து வைக்கிறார். அதனால் தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
{{comments.comment}}