தமிழ்நாட்டில் விரைவில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

Jul 17, 2024,09:14 PM IST
கோவை: மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர். 



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க முதல்வர் நிதி ஒதுக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சுமார் 1000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு தற்போது புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல்வர் தர்மபுரியில் 11 புதிய பேருந்துகளை இயக்கி துவங்கி வைத்தார்.

மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்குவதற்கு உத்தரவிடப்பட்டு முதற்கட்டமாக சென்னையில் அடுத்த வாரம் அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதற்குப் பிறகு கோயம்புத்தூருக்கும் அந்த பேருந்துகள் வர உள்ளன. பழைய பேருந்துகளின் அடித்தளம் சட்டம் சிறப்பாக இருக்கக்கூடிய பேருந்துகளை புதிய கூடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 800 பேருந்துகள்  கூடுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும். மாறி வருகின்ற கால சூழ்நிலை மற்றும் தொழில்நுட்பம் மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக இயங்கும் பேருந்துகள் வரவுள்ளது. சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகள் பயணிக்கும் வேகம் கூடியுள்ளது. எனவே இதில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சீர் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல 15ஆம் தேதி திருவள்ளூரில் 10 பேருந்து துவக்கி வைத்தார். மதுரை விருதுநகர் போன்ற பகுதிகளில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கோவையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட கோவை மண்டலத்தில் 21 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 20 புறநகர் பேருந்துகளும் ஒரு நகர்ப்புற பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அல்லாமல் கோயமுத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட உதகை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதில் முதல் கட்டமாக ஆயிரம் பேருந்துகள் தேர்தலுக்கு முன்பாகவும், இந்த வாரத்திற்குள் 300 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதனைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பேருந்துகளை வழங்க வழங்க மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததா இருந்த பழைய பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்