செம்ம  குட் நியூஸ்.. தஞ்சையில்.. விரைவில் விமான சேவை.. அமைச்சர் டி. ஆர் .பி ராஜா தகவல்!

Nov 25, 2023,05:28 PM IST

- மஞ்சுளா தேவி


தஞ்சாவூர்: டெல்டா மாவட்டமான தஞ்சையில் விரைவில் விமான சேவை தொடங்கப் போவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.


உலக பிரசித்தி பெற்ற கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். இக் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இத்தகு பெருமை மிக்க கோவில் அமைந்துள்ள நகரம்தான் தஞ்சாவூர். தஞ்சை சோழ அரசின் தலைநகரமாக விளங்கியது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைக்குப் பெயர் போனது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். இங்கு  வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை ஓவியங்களும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன. தஞ்சை மாவட்டம் பாசனத்திற்கு செழுமையான பூமி.இப்படி தஞ்சை மாநகரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புகளை காண வெளிநாட்டிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து போக்குவரத்து மற்றம் ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ஆனால் விமான சேவை இங்கு இல்லை. தஞ்சையில் பயணிகள் விமான சேவை தொடங்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.




தஞ்சை -புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமானப்படைத்தளம் உள்ளது. இந்த தளங்களில் போர் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த விமானப் படை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 27.14 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த உடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வர உள்ளது. விமான சேவையும் வந்தால், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன் கிடைக்கும்.


இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தஞ்சை மற்றும் ஓசூரில் விரைவில் விமான பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர் .பி ராஜா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்