சென்னை: நான் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும் இளைஞரணி பதவிதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகத்தில், திமுக இளைஞரணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுக இளைஞரணி தலைமைச் செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த விழாவில் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வருவாய் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கத்தையும், மாவட்ட, மண்டல அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான சமூக வலைதளப் பயிற்சியை பக்கத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். "உங்களுடன் உதயநிதி" என்ற சமூக வலைதள பக்கமும் தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி.பொய் பேசி அரசியல் செய்யும் பிஜேபி. பிரதமர் மோடி ஆறுமுறை அல்ல, ஆயிரம் முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறினேன். அதேபோல தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் நிரூபித்தனர். தமிழ்நாட்டில் 100 சிறந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கு பணியை செய்வோம். இல்லந்தோரும் இளைஞர் அணி மிக முக்கியமான பணி.
திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான். திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு முக்கிய காரணம். இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் செயலாளர் அவர்களுக்கு எனது நன்றி. இன்றைய காலகட்டத்தில் சமூகம் வலைதளங்கள் மிகவும் முக்கியம்.எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம். எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன் இளைஞர் அணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?
Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!
ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!