சென்னை: தவெக கட்சி பாடல் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்து விட்டு சொல்கிறேன் என்று பதில் அளித்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதன்பின்னர் சினிமா பணியினை முடிந்து விட்டு முழு அரசியல் வாதியாக மாறுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன் படி நடிகர் விஜய் தனது கடைசி படத்திலும் கமிட்டாக விட்டார். மற்றொருபுறம் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் காண ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில், இன்று தனது கட்சியின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து கட்சி பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் , தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது... சிருசும் பெருசும் ரசிக்குது... சிங்கப்பெண்கள் சிரிக்குது... மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது.. என்ற பாடல் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் உதியநிதி ஸ்டாலினிடம் விஜய் கொடி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வாழ்த்துக்கள் என்று கூறினார் உதயநிதி. தவெக பாடல் கேட்டீர்களா என்று கேட்டபோது, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின். விஜய்யை வைத்து குருவி என்ற படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
விஜய்யின் கட்சி கொடி அறிமுகத்திற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
விஜய் கட்சி கொடி மற்றும் பாடல் வெளியிட்டதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கையில் கொடியுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு விஜய் அண்ணா வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
சீமான் வாழ்த்து
விஜய் இன்று தனது கட்சிக் கொடி மற்றும் பாடலை வெளியிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிகக்கையில், தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}