சென்னை: அம்பேத்கர் குறித்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹசான் தெரிவித்துள்ளார்.
எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்கிறார்கள். அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு மக்களவை எதர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையில் இருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளில் இருந்து டாக்டர் அம்பேத்கர் தான் இந்தியாவை விடுவித்தார்.
அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சமநீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காக போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம் அரசியல் சாசனம் உருக் கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளை பற்றி ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரை பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}