சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது. பிரதமர் பதவி நிரந்தரமானது கிடையாது. ஒரு தமிழரை பிரதமராக்க நாடு தயாராக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் வாய்மொழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கட்சியின் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றபப்பட்டது. இது தவிர முக்கியமான 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
.jpg)
கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் பேசும்போது வழக்கம் போல அழுத்தமான பாயின்ட்டுகளை வைத்துப் பேசினார். அவரது பேச்சிலிருந்து: ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது. தோல்வியும் நிரந்தரம் இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரம் இல்லை. அந்த பீடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நான் 4 வயதில் இருந்து மேடையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகவே தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன்.
இந்தியாவில் நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழர்கள் நேர்மையாக வரி செலுத்தக் கூடியவர்கள். நான் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசு நடக்கிறது. அது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
நான் அரசியலுக்கு வந்தது எனக்காகவோ, நமக்காகவோ கிடையாது, நாளைக்காக. இன்று நான் விதை போட்டுள்ளேன். நாளை அதை வேறு ஒருவன் சாப்பிடுவான். ஒரு தமிழன் நாட்டின் பிரதமராகக் கூடாதா? அதற்காக நாட்டை நாம் தயார்படுத்த வேண்டும் என கமல் பேசி உள்ளார்.
தமிழன் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இன்றைய டிவி விவாதங்களுக்குரியதாகவும் இந்த தலைப்பு மாறியுள்ளது. யாரையாவது மனதில் வைத்து கமல்ஹாசன் இவ்வாறு பேசினாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}