காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இரண்டு முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.56 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன.
இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}