சென்னை:தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத் துறையாறு மற்றும் அணைக்கெடங்கு பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி தென்காசி, நெல்லை, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}