தென் மாவட்டங்களில்.. பிப்., 28ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Feb 24, 2025,06:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், வட தமிழ்நாட்டுப் பகுதிகளில்  பனிப்பொழிவுடன் மிதமான வெயிலும் நிலவி வருகிறது.


இந்தநிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 26 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், 28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,


தமிழ்நாடு,புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 


26.2.2025 மிதமான மழை:




தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


27.2.2025 மிதமான மழை:


தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


28.2.2025 கன மழை:


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


மிதமான மழை: 


தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும். 


1.2.2025 கன மழை:


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


மிதமான மழை: 


தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.


2.3.2025 மிதமான மழை:


 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவான லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்