டில்லி : பாஜக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறி உள்ளன. ஆனால் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறி உள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் டில்லி லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ள சோம்நாத் பாரதி அளித்தள்ள பேட்டியில், அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் தவறானவை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டால் உண்மை என்ன என்பது தெரிந்து விடும். ஒருவேளை கருத்துக் கணிப்புகள் சொல்வது போல பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஜூன் 04ம் தேதி கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் பொய்யாக போகின்றன. மோடி, மீண்டும் பிரதமராக மாட்டார். டில்லியில் உள்ள 7 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு தான் கிடைக்க போகிறது என்றார்.
பாஜகவுக்கு மாற்று உருவாகவில்லையா.. இந்தியா கூட்டணி வலுவடையவில்லையா?
டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் குறைந்தது 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் சோம்நாத் பாரதி, டில்லியில் காங்கிரஸ் 4 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் போட்டியிடுள்ளன. இந்த 7 இடங்களையும் இந்தியா கூட்டணி தான் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}