மும்பை: மும்பையில், செம்பூரிலிருந்து, சாத் ரஸ்தா வரையிலான மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
செப்டம்பர் 20, 2025 முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த சேவை இருக்காது. புதிய ரயில்கள், மேம்படுத்தப்பட்ட சிக்னல் அமைப்பு மற்றும் தற்போதுள்ள ரயில்களை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய இந்த முடிவை எடுத்துள்ளது மோனோரயில் நிறுவனம்.
செம்பூரிலிருந்து சாத் ரஸ்தா வரை செல்லும் 19.54 கி.மீ தூர மோனோ ரயில் நிறுத்தப்படுவதால் மக்களுக்குச் சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சமீபத்திய தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, மோனோரயில், அமைப்பை முழுமையாக மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் ஏழு முறை சேவை தடைபட்டது. ஆகஸ்ட் 19 அன்று பெய்த கனமழையின்போது, மைசூர் காலனி மற்றும் ஆன்டோப் ஹில்லில் இரண்டு ரயில்கள் பழுதாகி நின்றன. இதனால் 1,148 பயணிகள் சிக்கிக்கொண்டனர். செப்டம்பர் 15 அன்று பெய்த மழையில் 17 பயணிகள் வளைவான பாதையில் சிக்கிக்கொண்டனர்.
என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட உள்ளன?
மேம்பட்ட சிக்னல் தொழில்நுட்பம் நிறுவப்படும். இது ரயில்கள் பழுதாகி நிற்பதை குறைக்கும். மேலும், அமைப்பை சிறப்பாக கண்காணிக்க உதவும். புதிய ரயில்கள் சேர்க்கப்படும். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய ரயில்கள் முழுமையாக சரி செய்யப்படும். குறிப்பாக மழைக்காலங்களில் ரயில்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்க இது உதவும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் மாத மத்தியில் monorail சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
மும்பையில் மோனோ ரயில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு ..அடுத்தடுத்து ரிப்பேர் ஆனதால் நடவடிக்கை
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஆப்பு.. விசிக பானைக்காக போராடியது இதுக்குதான்!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}