சென்னை: தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி மொத்தமாக 39 இடங்களிலும் வெல்லும். அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று இந்தியா டுடே - சிவோட்டர் - மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடோ - சிவோட்டர் இணைந்து மூட் ஆப தி நேஷன் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு குறித்த முக்கிய கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தொடர்ந்து பலமாக உள்ளது. முன்பை விட பலம் வாய்ந்ததாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கு 39 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லையாம்.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 52 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். இது கடந்த தேர்தலை விட 5 சதவீத வாக்குகள் அதிகம். கடந்த லோக்சபா தேர்தலில் 47 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றது. அதில் 3 சதவீதம் தற்போத குறைந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 21 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. கடந்த தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் பலம் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக வாக்குகளை திமுகவும், பாஜகவும் பங்கு போட்டுக் கொண்டிருப்பதையே இந்த சர்வே முடிவுகள் காட்டுகின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து இந்தக் கருத்துக் கணிப்பில் எதுவும் கூறப்படவில்லை. அதுகுறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஒரு வேளை தவெகவையும் இந்த சீனுக்குள் கொண்டு வந்தால் இதே முடிவுகள் வருமா அல்லது மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை.
கேரளாவில் கரையும் இடதுசாரி கூட்டணி
கேரளாவைப் பொறுத்தவரை அங்கு இடதுசாரி கூட்டணிக்கு தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே இந்த முறையும் காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும் வெற்றி கிடைக்குமாம்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வென்றது. இடதுசாரிக் கூட்டணிக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு ஒன்று முதல் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், இடதுசாரிக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 18 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}