யூடியூபர் சவுக்கு சங்கர் மீது.. சென்னை, திருச்சி, சேலத்தில்.. வழக்குகள் பதிவு!

May 08, 2024,03:17 PM IST

சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீது  மேலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவை சைபர் கிரைம் போலீஸார் போட்ட வழக்கில் கைதாகி, ஏகற்கனவே சிறையில் உள்ள நிலையில், இன்று மீண்டும் சென்னை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 


யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேனி போலீசாரும் இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் விடுதியில் தங்கியிருக்கும் போது காரில் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.


இந்த நிலையில் கோவை மற்றும் தேனியில் ஏற்கனவே சவுக்கு சங்கரின் பெயரில் வழக்கு பதிவாகியுள்ள நிலையில் தற்போது சேலம், திருச்சி மற்றும் சென்னையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.




சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஒருவர் தற்போது சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமியும் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.


அதேபோல் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார்.இதன் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது ஒரு புகார் எழுந்துள்ளது. அதில் சப் இன்ஸ்பெக்டர் கீதா சவுக்கு சங்கர் பேசிய வார்த்தைகள் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் தகாத வார்த்தையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , துன்புறுத்துதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சவுக்கு சங்கர் மீது புகார்கள் குவிந்து வருவதால் வழக்குகளும் பதிவாகி வருகின்றன. அனைத்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டால்,  ஜாமீனில் வருவது பெரும் சிரமமாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்