டெல்லி: டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் (யமுனா விரைவுச் சாலை) செவ்வாய்க்கிழமை அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஏழு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் மோதிய பயங்கர விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரில் வரும் வாகனத்தைப் பார்க்கம் திறன் மிகவும் குறைவாக இருந்ததால், வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. மோதலுக்குப் பிறகு சில வாகனங்களில் தீப்பிடித்ததால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அடர்ந்த பனிமூட்டமே மோதலுக்குக் காரணம். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. சுமார் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை. மற்ற பயணிகளை அரசு வாகனங்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங் கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விபத்து குறித்து அறிந்ததும், உடனடியாக 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மற்றும் 14-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. விபத்துக்கான காரணம் பின்னர் விசாரிக்கப்படும். தற்போது நிவாரணப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கே முதலிடம் என்றார்.
டெல்லியில் கடும் பனி மூட்டம் கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் பனிமூட்டம் மட்டுமல்லாமல் காற்றின் மாசு காரணமாக புகை மூட்டமும் டெல்லியை தொடர்ந்து வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!
{{comments.comment}}