அயோத்தி: அயோத்தியில் தீபாவளித் திருநாளையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சரயு நதிக்கரையில் இந்த விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக 28 லட்சம் விளக்குகளை ஏற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 விளக்குகளே ஏற்ற முடிந்தது. இதுவே உலக சாதனைதான்.
இந்தியா தவிர மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் இந்த விழாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர ராம் லீலாவும் உத்தரகாண்ட் மாநிலக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

முன்னதாக அலங்கார தேர் பவனியையும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விளக்கேற்றும் நிகழ்ச்சியை வருடா வருடம் தீபோத்சவ் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அலங்கார ரதங்களும் பவனி வரும். இந்த முறை சுற்றுலாத்துறை மூலம் ராமாயானத்தை விளக்கும் அலங்கார ரதங்கள் வடிவமைக்கப்பட்டு பவனி வந்தன. 11க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன.
அயோத்தியில் ராமர் கோவில் வந்த பிறகு நடைபெறும் முதல் தீபோத்சவ் விழா என்பதால் இந்த விழா இந்த முறை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}