மொராக்கோவை உலுக்கிய பயங்கர பூகம்பம்... 300க்கும் மேற்பட்டோர் பலி

Sep 09, 2023,09:26 AM IST
மரகேஷ், மொராக்கோ: மொராக்கோ நாட்டில்  இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மரகேஷ் என்ற நகரம் பூகம்பத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நகரமே அலங்கோலமாகியுள்ளது.

மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தின் அளவு 6.8 ரிக்டர் என்று அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 300 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 



பூகம்பத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் உயிர்ப்பலி உயரும் என்று அஞ்சப்படுகிறது. மரகேஷ் மட்டுமல்லாமல், ஓகாய் மெடன் என்ற நகரிலும் கூட பூகம்ப பாதிப்புகள் உள்ளன. பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் அளவில் பூகம்பத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

மரகேஷ் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழமையான நகராகும். பூகம்பத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு தெருவில் குழுமியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்