மள மளன்னு மழை பெய்தால்.. மொறு மொறுன்னு இதைச் சாப்பிடுங்க..!

Jun 25, 2023,03:02 PM IST
சென்னை: மீண்டும் ஒரு மழைக்காலத்தில் இந்தியா நுழைந்துள்ளது. டெல்லி முதல் கேரளா வரை பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை வந்து நனைத்துச் செல்கிறது.

மழைக்காலம் வந்தாலே கூடவே தேநீரும், இளையாராஜா பாடல்களும், சுடச் சுட வடையும், பஜ்ஜியும் மக்களுக்கு நினைவுக்கு வரத் தவறுவதில்லை. 

மழை வந்தாலே வடை, பஜ்ஜி மட்டும்தானா.. வாங்க வேற என்னென்ன மொறு மொறு ஐட்டங்கள் இருக்குன்னு பார்ப்போம்.

பக்கோடா



சூடான சுவையான பக்கோடாவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா.. அதிலும் வெங்காய பக்கோடா மாதிரியான ஒரு சுவையான சைட் டிஷ் எதுவுமே கிடையாது. சூடாக, மொறுமொறுவென வெங்காய பக்கோடாவை ஒரு குட்டித் தட்டில் போட்டுக் கொண்டு கூடவே பாட்டுடன் மழையை ரசிக்கும் அழகு.. அடடா அடடா.. அனுபவிச்சுப் பாருங்க பாஸ்.

சமோசா



வடை, பஜ்ஜியைப் போலவே இப்போது நம்மவர்களும் சமோசாவை டேஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிலும் விதம் விதமான சமோசாக்கள் இப்போது வந்து விட்டன. பெரிய சைஸ் சமோசாவை விட்ட குட்டி குட்டி சமோசாக்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர் மக்கள். சூடாக போட்டு சாப்பிடும்போது தொண்டைக் குழிக்குள் அது இறங்கும் சுகமே அலாதியானது.

உளுந்து மற்றும் பருப்பு வடை



என்னதான் சமோசா அது இது என்றாலும் கூட நம்ம ஊர் பருப்பு வடைக்கும், உளுந்து வடைக்கும் ஈடு இணையே கிடையாது.. அதை அடிச்சுக்க ஆளே கிடையாது. மழை நேரத்தில் இந்த இரண்டுமே மக்களின் படு ஹாட்டான விருப்ப ஸ்னாக்குகளாக உள்ளன என்பதையும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உளுந்து வடைக்கு நிகரான டேஸ்ட்டும், மகிழ்ச்சியையும் தரவல்லதுதான் பருப்பு வடை.

பஜ்ஜி வகைகள்



அதேபோல பஜ்ஜிகளும் கூட மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுதான். குறிப்பாக வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி ஆகியவை செம டேஸ்ட்டானவை மட்டுமல்ல.. அருமையான மன மகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

முறுக்கு



முறுக்கும் கூட மழைக்காலத்துக்கு ஏற்ற நொறுக்குத்தீனிதான். அரிசி முறுக்கு மிக மிக சிறப்பானது. முன்பே திட்டமிட்டு முறுக்கு சுட்டு வைத்துக் கொண்டு மழை வரும்போதெல்லாம்  குட்டித் தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டே, டீயை குடித்துக் கொண்டே மழையை ரசிப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் !

போன்டா



விதம் விதமான போன்டாக்களும் கூட மழைக்காலத்துக்கு ஏற்ற சுவையான ஸ்னாக்ஸ்தான்.  மைசூர் போன்டா செம சிறப்பானது.  உளுந்து போன்டா, உருளைக்கிழங்கு போன்டா என்று பலவகையான போன்டாக்கள் நம்ம ஊரில் உள்ளன. நமது விருப்பமான போன்டாவை செய்து சுவைத்துக் கொண்டே மழையை ரசிக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை

news

கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

news

கரூர் துயரத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம்.. விஜய் அறிவிப்பு

news

Karur Stampede: புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. உள்பட 4 பேர் மீது வழக்கு!

news

Karur Tragedy: கரூர் கண்ணீருக்கு யார் காரணம்? .. இந்தக் கொடுமையெல்லாம் இனியாவது மாறுமா?

news

கரூர் துயரம்.. விஜய்க்கு இது பெரும் பாடம்.. இனியும் சுதாரிக்காவிட்டால் எல்லாமே கஷ்டம்!

news

விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.. கூட்டத்துக்கு டைமுக்கு அவர் வர வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

news

கரூர் துயரம்.. அரசும், காவல்துறையும் கடமையிலிருந்து தவறி விட்டன.. எடப்பாடி பழனிச்சாமி

news

மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது தவெக.. அதனை அதிமுக ஆதரிக்கிறது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்