டில்லி : நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் 2024 ல் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01 ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 04ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று பல்வேறு மீடியாக்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டுள்ளன.
இதில் பெரும்பாலான கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் கூறியுள்ள முடிவுகள் முழு விபரம் :
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் :
பாஜக கூட்டணி - 371
இந்தியா கூட்டணி - 125
மற்றவை - 47
ஜன் கி பாத் :
பாஜக கூட்டணி - 362 முதல் 392
இந்தியா கூட்டணி - 141 முதல் 161 வரை
மற்றவை - 10 முதல் 20 வரை
ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் :
பாஜக கூட்டணி - 353 முதல் 368 வரை
இந்தியா கூட்டணி - 118 முதல் 133 வரை
மற்றவை - 43 முதல் 48 வரை
ரிபப்ளிக் டிவி - பி மார்க் :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
டிவி 5 தெலுங்கு :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
என்டி டிவி (போல் ஆஃப் போல்ஸ்):
பாஜக கூட்டணி - 365
இந்தியா கூட்டணி - 142
மற்றவை - 36
நீதி ஆட்சியில்!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
{{comments.comment}}