பெங்களூரு: தேசியக் கல்விக் கொள்கை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் 8 மொழிகள் தெரியும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா எம்பியான சுதா மூர்த்தி.
இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவிதான் சுதா மூர்த்தி. மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களே.
இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தவறு இல்லை. எனக்கெல்லாம் 7, 8 மொழிகள் தெரியும். இதனால் பல விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. எனது பிள்ளைகளுக்கும் இதையே நான் பரிந்துரைப்பேன். தேசியக் கல்விக் கொள்கை, குழந்தைகள் பல மொழிகளை கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது, வாய்ப்பளிக்கிறது என்றார் சுதா மூர்த்தி.

மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட இந்த்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விட்டன. திமுக தரப்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}