சென்னை: சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாழ்தளப் பேருந்துகள் ஓடும் வழித்தடங்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் உள்பட 100 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து தற்போது இந்தப் பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்ற விவரத்தை எம்சிடி அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள 58 புதிய தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை அறிவித்துள்ள எம்டிசி, மேலும், புதிய தாழ்த்தளப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் வழித்தடங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள ரூட் விவரம்:
தி நகர் - திருப்போரூர் (5 பேருந்துகள்)
பிராட்வே - கோவளம் (5)
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் (6)
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் - கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (7)
பிராட்வே - திருப்போரூர் (4)
பிராட்வே - கூடுவாஞ்சேரி (4)
பட்டாபி - அண்ணா சதுக்கம் (2)
தி நகர்- கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (3)
தி.நகர் - பூந்தமல்லி (2)
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் - கூடுவாஞ்சேரி (3)
தாம்பரம் - மாமல்லபுரம் (3)
பிராட்வே - கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (2)
தாம்பரம் - ஆவடி (2)
பிராட்வே - செங்குன்றம் (3)
பெரம்பூர் - திருவான்மியூர் (2)
திருவொற்றியூர் - பூந்தமல்லி (3)
டோல்கேட் - திருவான்மியூர் (2)
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}