சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2023-24 பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. இதையடுத்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள் 2024 -2025ம் ஆண்டுக்குரிய Online Travel Concessional Pass இணையதளம் வாயிலாக பெரும் வரை 2023-24 ஆண்டிற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை, ஜூன் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் 2024-25க்குரிய ஆன்லைன் டிராவல் கன்செசன் பாஸ் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை ஆகஸ்டு 2024 வரை கால அவகாசம் கொடுக்கக் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாஸ் பெற்றுக் கொள்வதற்காக 2023-24 ஆண்டுக்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஜூன் மாதம் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்வது முடிவா.. அட அதுதாங்க ஆரம்பமே.. Falling is not the end!
கனவு .. யதார்த்தம்.. ஒரு அழகிய அனுபவம்.. A fantasy with a mermaid
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts
{{comments.comment}}