மும்பை: முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் 2வது ப்ரி வெட்டிங் விழா நடுக்கடலில் சொகுசு கப்பலில் 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், குஜராத்தின் தொழில் அதிபரின் மகளான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஜூலை 12ம் தேதி இந்து முறைப்படி மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு செண்டரில் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமணத்திற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், ப்ரி வெட்டிங் கொண்டாட்டம் போன மாதமே தொடங்கி விட்டது. இதற்காக 1000 கோடியை செலவளித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏராளமான பிரபலங்களை வரவழைத்து அமர்க்களப்படுத்தினார் அம்பானி.
முதல் ப்ரி வெட்டிங் கொண்டாட்டம் குறித்து பேசி முடிவதற்குள் 2வது ப்ரி வெட்டிங் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. அதுவும் எங்கு தெரியுமா? இத்தாலியின் நடுக்கடலில் சொகுசு கப்பலில் தொடங்கி பிரான்சில் முடிகிறது. இந்த வெட்டிங் கொண்டாட்டத்தில் 900 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். எம்.எஸ்.தோனி, ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்கபூர், தீபிகா படுகோன், அட்லி , ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அந்த சொகுசு கப்பலில் சகல வசதிகளும் உள்ளதாம். குறிப்பாக அதில் உள்ள ஒரு அறையின் வாடகை மட்டும் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வெட்டிங் கொண்டாட்டத்திற்கு மட்டும் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சொகுசு கப்பலில் கண்டிப்பாக செல் போன்களுக்கு அனுமதி இல்லையாம். மே 29ம் தேதி தொடங்கும் வெட்டிங் கொண்டாட்டம் 4 நாட்கள் சொகுசு கப்பலிலேயே நடக்கிறது. இத்தாலியில் ஆரம்பித்து சுமார் 4,380 கிலோ மீட்டர் இந்த கப்பல் பயணிக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் தனித்தனியாக தீம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் விருந்தினார்களை கவனிக்க மட்டும் 600 பணியாளர்கள் 24 மணி நேரம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சொகுசு கப்பலில் மட்டும் 1646 சொகுசு அறைகள் உள்ளன.
10 மாடிகள் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 41 கி.மீ. வேகத்தில் பயணிக்குமாம். இதனை மிதக்கும் சொர்க்கம் என்றே சொல்லலாம். அநத அளவிற்கு இந்த கப்பல் அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்