லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் ஒரு கேங்ஸ்டர் மரணமடைந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி என்ற முன்னாள் கேங்ஸ்டர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் முக்தார் அன்சாரி. அவரது மரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாரணாசி, காஸிப்பூர், மாவ், பந்தா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக பந்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரிக்கு நேற்று இரவு மயக்கம் வந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக முக்தார் அன்சாரி இறந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவரை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக முக்தார் அன்சாரியின் மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று முக்தார் அன்சாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்ப்படவுள்ளது. மருத்துவமனையைச் சுற்றிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாரணாசி, பந்தா, காஸிப்பூர், மாவ் ஆகிய மாவட்டங்களில் முக்தார் அன்சாரிக்கு மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது. காஸிப்பூரில் அவரது வீடு உள்ளது. அங்கு பெருமளவில் அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். கேங்ஸ்டராக இருந்த முக்தார் அன்சாரி பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
முக்தார் அன்சாரி மறைவு காரணமாக எழுந்துள்ள பதட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸாரும் ஆங்காங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவ் சதர் தொகுதியிலிருந்து உ.பி. சட்டசபைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தார் அன்சாரி. அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 8 வழக்குகளில் இதுவரை அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். பந்தா சிறையில் தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது.
முன்பு ஆதிக் அகமது.. இப்போது முக்தார் அன்சாரி
உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான கேங்ஸ்டர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள் அல்லது கொல்லப்பட்டு வருகிறார்கள். சமீப காலத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என்றால் கடந்த ஆண்டு ஆதிக் அகமது மற்றும் அவரது தம்பி ஆகியோரை, செய்தியாளர்கள் போர்வையில் ஊடுறுவிய ஒரு கும்பல் நேரலையில் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம்தான். ஆதிக் அகமதுவும் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்தான்.
இந்த நிலையில் இப்போது முக்தார் அன்சாரியின் மரணம் வந்து சேர்ந்துள்ளதால் உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு கேங்ஸ்டர்கள் மரணம் என்பது தொடர் கதையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}