- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
2026 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கையில் பெற்றேன்...
விருது பெற்ற மகிழ்ச்சியை, விருதுக்குக் காரணமான என் மாணவச் செல்வங்களுடன் இனிப்பு ஊட்டி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்த இனிமையான அந்த தருணத்தில் ஒரு மாணவன்,ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன்... ஸ்மார்ட் போர்டில் இருக்கும் நான் விருது பெறும் புகைப்படத்தைப் பார்த்து சூப்பர் சூப்பர் என்று தன் விரல்களால் சைகை செய்து,என்னிடம் காட்டிக் கொண்டே இருந்தான்.... திடீரென்று என்னிடம் எழுந்து வந்து, என் கையை நீட்ட சொன்னான்...

நீட்டினேன்...
அவனிடம் இருந்த பிளாஸ்டிக் மோதிரத்தை என் விரலில் போட்டான்...
திக்குமுக்காடிப் போனேன்...அன்பரசு என்ற அவனின் அன்பில்...
அந்த மோதிரம் பிளாஸ்டிக்காக எனக்குத் தெரியவில்லை.... பிளாட்டினமாகத் தெரிந்தது....
இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் உண்மையான அன்பையும்,என்னைக் கொண்டாடிய என் உண்மையான நண்பர்களையும்....
இன்னும் ஒருபடி மேலே போய் நான் பெற்ற விருதை அவர்கள் பெற்றது போல் எண்ணி மகிழ்ந்த என் அன்பு நட்புகளையும்....

இத்தகைய நட்புகளை எனக்குப் பரிசளித்த என் அப்பன் முருகனையும் மட்டுமே...
மனதில் நிறுத்தி என் மாணவச் செல்வங்களை உலகம் போற்றச் செய்ய ஓயாது உழைப்பேன்...
என் மாணவச் செல்வங்களே என் உலகம்...
என் உலகமே என் மாணவச் செல்வங்கள் தான்...
கொசுறு செய்தி
ஓரிரு நாள்களுக்கு முன் அன்பரசு என்னை டீச்சர் டீச்சர் என்று ஆசையாகக் கூப்பிட்டான்... என்னவென்று நானும் ஆவலோடு திரும்பிப் பார்த்துக் கேட்டேன்...
பொசுக்கென்று கண்ணடித்து விட்டான்......
வேறு வழியில்லாமல் என் அன்பான அன்பரசுவின் காதைப் பிடித்துத் திருகி விட்டேன்..!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
பிளாட்டினம்
Monday Motivation: மாயமான பண்புகள்!
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
{{comments.comment}}