சென்னை: இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்று இருக்கிறாள் என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மீராவின் தற்கொலை தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வார்த்தைகளால் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வருவதுடன் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், மிகுந்த நம்பிக்கையுடன் விஜய் ஆண்டனி வடித்துள்ள இந்த வார்த்தைகள் ஒரு வகையான ஆறுதலையும் தருகிறது.
விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:
அன்பு நெஞ்சங்களே
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்து விட்டேன் .
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.
உங்கள்
விஜய் ஆண்டனி
மீண்டு வரட்டும்
நடிகர் விஜய் ஆண்டனி இந்தப் பதிவில் தனது மகள் பெயரில் நல்ல காரியம் செய்வதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. விஜய் ஆண்டனி தனது பெரும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையே அது.
அவர் செய்யப் போகும் நல்ல காரியம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தனது மகளின் பெயரில் அறக்கட்டளை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் போன்ற வழிகளில் விஜய் ஆண்டனி நேரம் செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் மன வலிமை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். அவர் செய்யும் நல்ல காரியத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள் என நம்பலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}