அம்மா!

Jan 21, 2026,10:34 AM IST

- ச. அகல்யா


ஆயிரம் உறவுகள் நம் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தாலும் 

அம்மா என்ற மூன்று எழுத்துக்கு சொந்தக்காரியைப்போல் வராது... 


அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட ....

நமக்கு முதல் வார்த்தை பேச கற்றுக் கொடுத்தவளும் அவளே... 


அதைப் பார்த்து சந்தோஷத்தில் அழுததும் அவளே... 

நமக்கு முதல் அடி எடுத்து வைக்க கற்றுக் கொடுத்ததும் அவளே... 


அந்த முதல் அடியைப் பார்த்த அந்த ஒரு நொடி குழந்தையைப் போல் மாறி

சந்தோஷத்தில் துள்ளியதும் அவளே... 




அவளைப் போல் ஒரு மூன்றெழுத்து மந்திரம் இல்லை, 

அவளைப் போல் ஒரு சிறந்த ஆசிரியரும் இல்லை


பத்து மாதம் நம்மை சுமந்ததற்காக அல்ல... 

வாழ்நாள் முழுவதும் நம்மை தன் இதயத்தில் சுமந்து கொண்டிருப்பதற்காகவே

அவள் கடவுளாகிறாள்!


நமக்கு பசிக்கும் முன்னே அவள் வயிறு துடிக்கும்... 

நமக்கு ஒரு சிறு காயம் என்றால் 

அவள் கண்கள் முதலில் கண்ணீர் வடிக்கும்!


உலகமே நம்மை எதிர்த்தாலும், 

"என் பிள்ளை தோற்காது" என்று நம்பும் ஒரே ஜீவன் அவள்!


கோடி நன்மைகள் செய்தாலும் ஈடாகாது அவளது ஒரு நொடி அன்பிற்கு... 

அவள் பாதம் தொட்டு வணங்கினால் போதும், 

வேறெந்தக் கோவிலும் தேவையில்லை நம் வாழ்விற்கு!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்