புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுத்தம் சுந்தரராஜனை மர்ம நபர் தாக்கியதால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன், பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு நெல்லித்தோப்பு சிக்னல், சுப்பையா சிலை- லெனின் வீதி சந்திப்பில், தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்துள்ளார்.
அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்த சத்தமும் இல்லாமல் சுந்தரராஜன் பின்னாடியே, ஒரு பெரிய கருங்கல்லை எடுத்துகொண்டு அவர் மீது கொலைவெறி தாக்குதலோடு வேகமாக வந்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்களும், அங்கு பேனர் கட்டும் பணியில் இருந்தவர்களும் சத்தம் எழுப்ப சுத்தம் சுந்தர்ராஜன் சுதாரித்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
ஆனால் அந்த நபர் வேகமாக வந்து சுந்தரராஜன் முதுகில் பலமாக அடித்துள்ளார். பின்னர் உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க சுந்தரராஜன் விரைந்தா். இந்திராகாந்தி சிலை வழியே நோக்கி விரைந்த அந்த நபரை சிறிது தூரம் துரத்திய சுத்தம் சுந்தர்ராஜன் வலி காரணமாக அங்கேயே அமர்ந்து விட்டு, பிறகு அருகில் இருந்த உருளையன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் துறை இந்த புகாரை எடுத்துகொண்டு வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவவர்கள் உதவியோடு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சுந்தரராஜன் அனுமதிக்கப்பட்டார்.
சுத்தம் சுந்தர்ராஜன் புதுச்சேரியில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டியும் அதை அரசுக்கு கோரிக்கையாய் வைத்தும் வந்துள்ளார். இதை பொறுக்க முடியாமல், ஒரு சமூக விரோதி செய்த இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை அளிக்க காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூரபிள் அசோசியேஷன் நிறுவனர் டாக்டர் ஆ. ஜெயராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}