பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு

Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: பொய்யை படிக்க வேண்டாம் என்பதால் ஆளுநர் படிக்காமல் சென்றிருக்கலாம் என்று உரையை படிக்காமல் சென்ற ஆளுநர் ஆர். என். ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.


2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.




இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நீங்க எழுதி கொடுத்ததை அவர் படிக்க வேண்டும்.  அதை பார்த்த அவர் இவ்வளவு பொய்பேச வேண்டுமா என்று பார்த்து விட்டு போய்விட்டார். இப்ப இதை ஆளுநர் படித்திருந்தால் நாங்கள் எல்லாம் என்ன நினைப்போம். நல்ல ஆளுநருனு நினைச்சோம். இதுக்கு அவரு திமுகவிலேயே சேர்ந்திருக்கலாம்னு நினைத்திருப்போம்.


எல்லாருக்கும் தெரியும். தெருவுக்கு தெரு மதுக்கடைகள். எங்கும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் அதிகமாக விற்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றது. எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு தான் வழி தெரியவில்லை. 


திமுகவினர் இதை எல்லாம் மறைத்து விட்டு நாங்கள் நல்லாட்சி செய்கிறோம் என்கின்றனர். முதலில் 5000 பொங்கல என்றார்கள். அப்புறம் 2500 என்றார்கள். அப்புறம் 1000 என்றார்கள். இப்போது 103 ரூபாய்க்கு வந்துள்ளது. வெறும் 3 ரூபாய்க்கு வருவதற்குள் நாங்கள் முழித்துக்கொள்ள வேண்டும்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும். சின்னம் கேட்டிருக்கிறோம் என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்