#அடுத்து_நாமதான்ணே.. சீமான் பிறந்த நாள்.. டிவிட்டரை தெறிக்க விட்ட நாம் தமிழர் "தம்பிகள்"!

Nov 08, 2023,03:51 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 57வது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாடிய நிலையில் டிவிட்டர் தளத்தை அவரது கட்சியினர் தெறிக்க விட்டனர். அடுத்து நாமதாண்ணே என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்டாக்கினர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தில் நவம்பர் 8 ,1966 ஆம் ஆண்டு பிறந்தவர் சீமான். திரைப்பட இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி பின்பு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மாறியவர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். 


தமிழ் தேசிய அரசியலை மேற்கொண்டு  வரும் சீமானின் மேடைப் பேச்சுக்கள் மிகப் பிரபலமானவை. அவரது பேச்சுக்கள்தான் அவரை நோக்கி இளைஞர் பட்டாளத்தை இழுத்து வர உதவியது. மே 10, 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை நடத்த ஆரம்பித்தார். ஒரு தனி மனிதராக போராடி வருபவர்.




அரசியலுக்கு வந்த பின்னர் காவிரி, முல்லைப் பெரியார் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தியவர். தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என முழக்கமிட்டு வருகிறார். இவரது கொள்கைகள் பல சர்ச்சைக்குள்ளானாலும் கூட விடாமல் தொடர்ந்து தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார். 


சீமான் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு  அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


நாம் தமிழர் கட்சியினரும் டிவிட்டர் பக்கத்தில் #அடுத்து_நாமதான்ணே என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் வைரலாக்கியுள்ளனர். இன்று முழுவதும் அது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்