சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக மற்றும் பாஜக தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. அடுத்த கட்டமாக தேர்தல் பிரச்சாரம் ஜோராக தொடங்கியுள்ளது. இன்று வேட்பாளர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் வேலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னம் பிரச்சனை காரணமாக தேர்தல் குறித்து எந்த வேலைகளையும் செய்யாமல் இருந்து வந்தது. கடந்த 23ம் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 40 தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவித்தார் சீமான்.
நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரும் ஒரே கட்சியாக உள்ளது. அந்த வகையில் தேர்தல்களில் 50 சதவீத பெண்களுக்கு வாய்ப்பளிப்பார் சீமான். அந்த வகையில் லோக்சபா தேர்தலிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் சீமான். ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்த சீமான் மார்ச் 26ம் தேதி தனது கட்சியின் சின்னத்தையும் அறிமுகம் செய்துவிட்டு மார்ச் 27ம் தேதி தனது பிரச்சாரத்தையும் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வேண்டாம். படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்னம் முடிவாகிய பின்னர் தான் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
{{comments.comment}}