கோஹிமா: நாகாலாந்து மாநில பாஜக தலைவரும், எம்பியுமான தெம்ஜென் இம்னா அலாங் செம ஜாலியான மனிதர். ஆனால் அவரையே ஜெர்க் ஆக வைத்து விட்டது ஒரு இமெயில்.
எல்லோரும் அரசியல் தலைவர்களிடம் என்ன கேட்பார்கள்.. எங்க ஏரியாவுக்கு ரோடு போட்டுக் கொடுங்க, வேலை வாங்கிக் கொடுங்க, கல்யாணம் பண்ணப் போறோம் செலவுக்கு உதவுங்க.. மருத்துவ செலவுக்கு உதவுங்க.. இப்படித்தானே கேட்பார்கள்.. இதுதானே உலக வழக்கமும் கூட.. ஆனால் பாருங்க, நம்ம இம்னாவுக்கு ஒரு சூப்பரான இமெயில் வந்துள்ளது. அதைப் பார்த்து மனிதர் அப்படியே ஷாக்காயிட்டாராம்!
இம்னாவுக்கு அரபிந்தா பான்டா என்பவர் ஒரு இமெயில் அனுப்பியிருந்தார். இந்த இளைஞர் அதில் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா.. சார், அக்டோபர் 31ம் தேதி எனது கனவு நாயகியுடன் நான் டேட்டிங் போகிறேன். இதுதான் முதல் டேட். ஆனால் எந்த வேலையிலும் இப்போது நான் இல்லை. எனவே என்னிடம் காசு இல்லை. தயவு செய்து எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.. இப்படிப் போகிறது அந்த இமெயில்.

"அரே கியாரே பாப்ரே" என்று டெரராகிப் போன இம்னா, இந்த இமெயிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ளார். இப்ப நான் என்ன செய்றது என்றும் மக்களிடமே கேட்டுள்ளார்.
அதற்கு ஒருவர், பேசாம நீங்களே டேட்டிங்குப் போயிருங்க என்று கலாய்த்துள்ளார். இன்னொருவர், பாவம் போய்ட்டா போறான் தம்பிதானே.. ஹெல்ப் பண்ணுங்க என்று பரிந்துரைத்துள்ளார். இன்னொருவரோ பேசாம இவரை எம்எல்ஏ ஆக்கிருங்க.. கலகலப்பா இருக்கும்ல என்று ஜாலியாக கூறியுள்ளார்.
இருந்தாலும் இந்த 2கே கிட்ஸ் செம ஜோவியல்தாம்ப்பா!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!
சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!
நெருப்பும் நீரும்!
ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!
மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
{{comments.comment}}