புஷ்பா 2 படம் பார்க்க வந்த போது சிக்கிய கடத்தல்காரன்.. Smuggling டெக்னிக்ஸ் கத்துக்க வந்திருப்பாரோ!!

Dec 22, 2024,04:46 PM IST

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், புஷ்பா  2 படம் பார்க்க வந்திருந்த தலைமறைவு கொலையாளி மற்றும் கடத்தல் நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ரசிகர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், போலீஸார் வந்த வேலையை சட்டுப்புட்டென்று முடித்து விட்டுக் கிளம்பியதால் ரசிகர்கள் தொடர்ந்து தடங்கல் இல்லாமல் படத்தைப் பார்த்து ரசித்தனர்.


செம்மரக் கடத்தல்காரன் புஷ்பராஜ் குறித்த கதைதான் இந்த புஷ்பா. நிஜக் கடத்தலையும், கற்பனை கதாபாத்திரத்தையும் வைத்துப் புனையப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது பாகமும் வெளியாகி அதிரிபுதிரியாக வசூலித்து வருகிறது.


இந்த நிலையில் நாக்பூரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது புஷ்பா 2 படம் ரிலீஸாகியுள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ஒரு போதைப் பொருள் கடத்தல்காரனை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். நாக்பூரைச் சேர்ந்தவர் விஷால் மேஷாராம். இவர் ஒரு கடத்தல்காரர், கொலையாளி.. 27க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார்.




நாக்பூரில் உள்ள மல்ட்பிளக்ஸ் தியேட்டரில் புஷ்பா 2திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க விஷால் வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தியேட்டரில் போலீஸார் சாதாரண உடையில் குவிக்கப்பட்டனர். விஷாலும் படம் பார்க்க வந்தார். உள்ளே வந்த நபர் வெளியில் தப்பி விடாதபடி சுற்றிலும் அலர்ட் செய்த பின்னர் தியேட்டருக்குள் புகுந்த போலீஸார் ஜாலியாக படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த விஷாலை அப்படியே கொத்தாக தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர்.


புஷ்பராஜை ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், தங்களுடன் நிஜமான ஒரு கடத்தல்காரன் படம் பார்த்து ரசித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போலீஸார், விஷாலை வெளியே கூட்டிக் கொண்டு போய் விட்டனர்.


கைது செய்யப்பட்ட விஷால் பயங்கரமான கிரிமினலாம். போலீஸாரைக் கூட பல தருணங்களில் தாக்கியுள்ளாராம். கொடூரமான கேங்ஸ்டர் என்றும் சொல்கிறார்கள்.  ஒரு வேளை புஷ்பராஜின் டெக்னிக்ஸ் எதையாவது கற்றுக் கொள்ளலாம் என்று விஷால் மேஷாராம் தியேட்டருக்கு வந்தாரோ என்னவோ!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்