Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

Nov 26, 2024,11:25 AM IST

இன்றைய எந்திரமயமான வாழ்க்கை முறையில் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் அல்சர். இதனால் மக்கள் முறையாக சாப்பிட முடியாமலும், உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சினைகளால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


சரி இந்த அல்சர் பிரச்சினை எதனால் வருகிறது.. இதற்கு காரணம் என்ன.. என்றால் முறையான உணவு பழக்கமின்மை, ஃபாஸ்ட் புக் உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை கலரூட்டப்பட்ட உணவுகள், போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. அதிலும் இரவில் அதிக நேரம் கண் விழித்து காலையில் தாமதமாக எழுந்து விட்டு காலை உணவை தவிர்த்து இஷ்டத்திற்கு உணவை உண்பதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அதே சமயத்தில் நாம் சாப்பிடும் காலை உணவு அனைத்து சத்துக்கள்  நிறைந்த உணவாக இருக்க வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் உணவு அப்படி இருக்கிறதா என்றால்  இல்லை. அதேபோல் காலையில் நேரத்திற்கு சாப்பிடாத ஒரு காரணத்தால் மதிய இரவு உணவுகள் மிகவும் தாமதமாகிறது. இதனால் நம் உடலில் முறையான செரிமானத் தன்மையை இழப்பதாலும் அல்சர் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் சாப்பிடும் உணவில் அதிக காரம், புளிப்பு, மசாலா போன்ற உணவுகள் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அல்சர் என்றால் என்ன..? 




பொதுவாக தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்லும் உணவுக் குழாயிலும், இரைப்பை முன்சிறு குடலிலும், ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என  சொல்வார்கள். அதேபோல் இரைப்பையில் புண் ஏற்பட்டால் அதனை கேஸ்டிரிக் அல்சர் எனவும் கூறப்படுகிறது.


இந்த அல்சர் பிரச்சனைகளை ஹாஸ்பிடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம்? இதற்கான என்ன இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து பார்ப்போம்.


- அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாக மாதுளை மற்றும் தேங்காய் சில்லு சேர்த்து ஜூஸ் செய்து பருகலாம். 


- அதேபோல் வெண் பூசணிக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் தேங்காய் சில்லுகளை சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து பருகி வந்தாலும் அல்சர் குணமாகும்.


- இது தவிர முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொண்டு, அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், தக்காளி  சேர்த்து சூப் செய்தும், முட்டைக்கோஸ் துண்டுகளை பச்சையாக அடித்து  ஜூஸ் செய்தும், பருகி வந்தால் அல்சர் குணமாகும் என இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.


குறிப்பு: மேற்குறிப்பிட்ட ஜூஸ் அல்லது சூப் ஏதேனும் ஒன்றை மட்டும் தினசரி பருகாமல், அன்றாட உணவு முறைகளை சரி செய்து அத்துடன் சுழற்சி முறையில் இந்த ஜூஸ் மற்றும் சூப்புகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக அல்சர் குணமாகும். இதுதொடர்பாக முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதும் நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு

news

திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

news

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!

news

அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?

news

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!

news

குருதிப்பூக்கள் (சிறுகதை)

news

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

news

வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்